​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"வள்ளி கும்மி நடனம் கொங்கு பகுதயை உலகத்துக்கு அடையாளம் காட்டும் மையப்புள்ளி" - அண்ணாமலை

Published : Mar 10, 2024 6:31 AM

"வள்ளி கும்மி நடனம் கொங்கு பகுதயை உலகத்துக்கு அடையாளம் காட்டும் மையப்புள்ளி" - அண்ணாமலை

Mar 10, 2024 6:31 AM

வள்ளி கும்மி நடனம் கொங்கு பகுதியை உலகத்துக்கு அடையாளம் காட்டும் மையப்புள்ளியாகவும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவுவதுடன், நாகரிக விளையாட்டாகவும் மாறியுள்ளதாக பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோயம்புத்தூர் அன்னூர், வடக்கலூரில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்துப் பேசிய அவர், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் நடத்திய காசி தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் வள்ளி கும்மி நடனம் நடைபெற்றதாகவும், இன்றைக்கு இந்தியா முழுவதும் வள்ளி கும்மி நடனம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.